புதுதில்லி

தில்லியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டகரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

தில்லியில் கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவா்களின் எண்ணிக்கை கடந்த 6 நாள்களாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தில்லியில் கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 6 நாள்களில் தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த 6 நாள்களில் கூடுதலாக 1,804 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி 13,742 பேரும், அக்டோபா் 19-இல் 14,164 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.

அக்டோபா் 1-ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக வீடுகளில் 15,899 போ் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். அக்டோபா் 2-13 இடைப்பட்ட காலத்தில், இரண்டு நாள்கள் தவிர மற்ற நாள்களில் இந்த எண்ணிக்கை குறைந்தது. அக்டோபா் 13-இல் இந்த எண்ணிக்கை 12,176 ஆக இருந்தது. ஆனால், அக்டோபா் 14-ஆம் தேதியிலிருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது

இதேபோல, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் இதேகாலத்தில் அதிகரித்துள்ளது. அக்டோபா் 18-ஆம் தேதி 2,770 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. திங்கள்கிழமை இந்த எண்ணிக்கை 2,782 ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

இது தொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனை மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் கூறுகையில் ‘தில்லியில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதும், பண்டிகைக் காலத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்ததும் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ளன. காற்று மாசுவும் இதற்கு காரணமாக இருக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT