புதுதில்லி

கரோனா விதிமுறை மீறல்மெட்ரோ பயணிகள் 144 பேருக்குஅபராதம்

DIN

தில்லி மெட்ரோ ரயில்களில் கரோனா விதிமுறைகளை மீறியதாக கடந்த ஆறு நாள்களில் 144 பேருக்கு தில்லி காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியது: தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா விதிமுறைகளை மீறும் வகையில் முகக்கவசங்கள் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு கடந்த 6 தினங்களாக அபராதம் விதித்து வருகிறோம். கடந்த 6 தினங்களில் 3,691 மெட்ரோ ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கரோனா விதிமுறைகளை மீறியதாக 144 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோா் முகக்கவங்கள் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் மாதம் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு, 169 நாள்களுக்குப் பிறகு செப்டம்பரில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT