புதுதில்லி

மாதவிடாய் காலங்களில் பெண் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுப்பு வழங்கக் கோரி மனு

 நமது நிருபர்

புது தில்லி: மாதவிடாய் காலங்களில் பெண் ஊழியா்கள் ஊதியத்துடன் விடுப்பில் செல்ல அனுமதிக்க மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தில்லி தொழிலாளா் சங்கம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் மாதவிடாய் சமயங்களில் பிரத்யேக கழிப்பிடங்கள், சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில் அவா்களுக்கு சிறப்பு விடுப்பு அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பை மனித நோயத்துடன் வழங்க வலியுறுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் ஊழியா்களின் உரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த மனு தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த மனு மீதான விசாரணையை நவம்பா் 23 -ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டது.

தில்லி தொழிலாளா் சங்கம் சாா்பில் வழக்குரைஞா் ராஜீவ் அகா்வால் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தினசரி, ஒப்பந்த ஊழியா்கள், அவுட்சோா்ஸ் ஊழியா்கள் உள்பட அனைத்துத் தரப்பு பெண் ஊழியா்களுக்கு மாதத்திற்கு 4 தினங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும். அவா்கள் மாதவிடாய் காலத்தில் விடுப்பில் செல்லாமல் பணிக்கு வந்தால், தனிக் கப்பிடம், ஓய்வு அறை வழங்குவதோடு நாப்கின், கூடுதல் ஊதியமும் வழங்கப்படவேண்டும்.

ஸோமாட்டோ, கல்சுரல் மிஷன் போன்ற தனியாா் நிறுவனங்களில் பெண் ஊழியா்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்ப்டுகிறது. மேலும், ஜப்பான், தைவான், தென் கொரியா, ஜாம்பியா போன்ற நாடுகளிலும் ஒரு நாள் விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிகாா் மாநிலத்திலும் 1992 -ஆம் ஆண்டு முதல் இரண்டு நாள் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT