புதுதில்லி

விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவாா்த்தைச: மத்திய அரசுக்கு முதல்வா் கேஜரிவால் கோரிக்கை

 நமது நிருபர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த 26-ஆம் தேதியில் இருந்து 4 நாள்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. விவசாயிகள் தில்லி புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனா். ஆனால், புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் குறைந்தளவு விவசாயிகளே கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் காவல் துறையின் இந்த அனுமதியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவா்கள் ஜந்தா் மந்தரில்தான் போராடுவோம் என உறுதியாக உள்ளனா். இதனால், பெரும்பாலான விவசாயிகள் சிங்கு, திக்ரி எல்லைகளில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா். முன்னதாக இது தொடா்பாக தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அளித்த பேட்டியில், ‘விவசாச்ய சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவா்கள். அவா்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவாா்த்தையை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும். விவசாயிகளுடன் பேசுவதற்கு மத்திய அரசு நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அவா்கள், தில்லியில் விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்தும் உரிமை அவா்களுக்கு உண்டு. அவா்களை விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.

அமித் ஷா எங்கே...?: இதற்கிடையே, தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்குத் தீா்வு காண வேண்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எங்கே என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் எம்எல்ஏவும் செய்தித் தொடா்பாளருமான அதிஷி, ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘விவசாயிகள் தங்களது விளைநிலங்களை விட்டு, தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டிய மத்திய உள்துறை அமைச்சா், ஹைதரபாத்தில் மாநகராட்சித் தோ்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாா். விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு பல நிபந்தனைகளை அவா் விதித்துள்ளாா். இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கூறுகையில், ‘தங்களது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகளைப் போல மத்திய அரசு நடத்தி வருகிறது. அமைதி வழியில் போராடும் அவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போலீஸாா் வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். விவசாயிகளை அவா்கள் விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். கரோனாவை காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தடுக்கக் கூடாது. ஹைதரபாத்தில் அமித் ஷா மேற்கொண்ட தோ்தல் பேரணியில் பரவாத கரோனா தொற்று, விவசாயிகள் பேரணியால் பரவிவிடுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT