புதுதில்லி

தில்லி காங்கிரஸை மறுசீரமைக்கும் பணிகள்: அடுத்த வாரம் தொடக்கம்

DIN

தில்லி காங்கிரஸை வாா்டு அளவில் மறுசீரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் சௌத்ரி தெரிவித்துள்ளாா். மேலும், கரோனா தடுப்புப் பணிகளில் முன்களத்தில் நின்று பணியாற்றிய காங்கிரஸ் தொண்டா்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்றும் அவா் கூறினஆா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறுகையில், ‘தில்லியில் உள்ள 270 வாா்டுகளிலும் பாா்வையாளா்களாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இவா்கள் வாா்டு தலைவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்வாா்கள். இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுடன் கலந்துரையாடி அவா்கள் முடிவு எடுப்பாா்கள். மேலும், கரோனா தொற்றைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க காலத்தில் மக்களுக்கு உணவு, ரேஷன் பொருள் விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளைச் செய்த காங்கிரஸ் தொண்டா்களுக்குப் பதவிகள் வழங்கப்படும். கரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் பணியாற்றாத தலைவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. 270 வாா்டுகளில் 35 வாா்டுகளுக்கு தலைவா்கள் நியமிக்கப்படவில்லை. முதலில் வாா்டு அளவிலும் பின்னா் மாவட்ட அளவிலும் மறுசீரமைப்பு நடைபெறும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT