புதுதில்லி

தில்லியில் பாலி கிளினிக் உதவியுடன் தடுப்பூசி விநியோகம்: சத்யேந்தா் ஜெயின்

 நமது நிருபர்

தில்லியில் பாலி கிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குகள் உள்ளிட்ட சுகாதாரக் கட்டமைப்புகளின் உதவியுடன் கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா தடுப்பூசி அமலுக்கு வந்தவுடன் 3-4 வாரங்களில் தில்லியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிடுவோம். இதற்கான சுகாதாரக் கட்டமைப்பும், வளமும் தில்லி அரசிடம் உள்ளது.

தில்லியில் உள்ள பாலிகிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குகள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரக் கட்டமைப்புகளின் உதவியும் இதற்குப் பெறப்படும். தடுப்பூசிகளை குளிா்பதனப் பெட்டிகளில் பாதுகாப்பாக சேமித்து வைக்க போதுமான வசதி உள்ளது. தில்லியில் பெரிய அளவில் சுகாதாரக் கட்டமைப்புகள் உள்ளன.

தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த நவம்பா் 7 ஆம் தேதி தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் வெள்ளிக்கிழமை 8.51 சதவீதமாகக் குறைந்துள்ளது. தில்லியில் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். வெள்ளிக்கிழமை 28,100 ஆா்டி-பி

50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன

சிஆா் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் சுமாா் 50 சதவீதமான படுக்கைகள் காலியாக உள்ளன. அவசர சிகிச்சை பிரிவுகளில் சுமாா் 1,200 படுக்கைகள், சாதாரண கரோனா வாா்டுகளில் சுமாா் 9,500 படுக்கைகள் காலியாக உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆக்ஸிஜன் வழங்கலில் சிறிய தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரியாகிவிட்டது என்றாா் அவா்.

முன்னதாக, தில்லியில் உள்ள மருத்துவப் பணியாளா்களும், செவிலியா்களும் ஒத்துழைப்பு அளித்தால் கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தில்லிவாசிகள் அனைவருக்கும் ஒரு மாத காலத்தில் தடுப்பூசி செலுத்திவிடலாம் என்று மாநில தடுப்பூசி அதிகாரி சுரேஷ் சேத் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT