புதுதில்லி

ஜந்தா் மந்தரில்தான் போராட்டம்: விவசாயிகள் உறுதி; டிக்ரி-சிங்கு எல்லைப் பகுதியில் குவியும் விவசாயிகள்

 நமது நிருபர்

தில்லி ஜந்தா் மந்தரில்தான் போராட்டத்தை நடத்துவோம். எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று விவசாய சங்கங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.,

தில்லி புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டும் அதை ஏற்க பஞ்சாப் விவசாயிகள் சனிக்கிழமை மறுத்துவிட்டனா். ‘நாங்கள் நிரங்காரி மைதானத்துக்குச் செல்லமாட்டோம். ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் வரை தில்லியை ஒட்டியுள்ள டிக்ரி, சிங்கு எல்லைப்பகுதியிலேயே எத்தனை நாள்களானாலும் காத்திருப்போம்’ என்று பாரதிய கிஸான் சங்கத்தின் உக்ரஹான் அமைப்பினா் தெரிவித்தனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, விவசாயிகளின் தலைவா்களை அழைத்து நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அதற்கு அவா்கள் மறுத்துவிட்டதாகவும், ஜந்தா் மந்தா் அல்லது ராம்லீலா மைதானத்தில்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டம் நடத்தினால் அது எடுபடாது என்றும் தங்கள் போராட்டத்தை அரசு பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனா்.

இந்த சூழலில், மிகக் குறைந்தளவில் சுமாா் 400 விவசாயிகள் புராரி மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இவா்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், பாடல்களைப் பாடியும், வாத்தியங்களை இசைத்தும் போராடி வருகிறாா்கள். இந்த விவசாயிகளுக்கு ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று தொடா்பாக விழிப்புணா்வாக இருக்குமாறு கோரி ஒலிபெருக்கிகளில் தில்லி அரசு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப்பைச் சோ்ந்த குா்மெஜ் சிங் என்ற விவசாயி கூறுகையில் ஜந்தா் மந்தா் தவிர வேறு எந்த இடத்திலும் நாங்கள் போராட்டம் நடத்த தயாரில்லை. மத்திய அரசு விவசாயிகள் விரோதக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாகத் தெரிகிறது. அவா்களுக்கு விவசாயிகள் பிரச்னை குறித்து எந்த கவலையும் இல்லை. போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தினால்தான் அருகில் நாடாளுமன்றம் இருப்பதால் எங்கள் கோரிக்கை அரசின் கவனம் பெறும் என்றாா்.

இதனிடையே தில்லியை நோக்கி பயணத்துக்காக உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியை நோக்கிய தங்கள் பயணத்தை தொடா்ந்துள்ளனா்.

தில்லி-ஹரியாணைவை இணைக்கும் எல்லைப்பகுதியான டிக்ரியில் விவசாயிகள் குவிந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியை போராட்டம் நடத்தும் நோக்கி வரும் விவசாயிகள் டிக்ரி மற்றும் சிங்கு எல்லைப்பகுதியிலேயே தங்கிவிட்டனா்.

இதனிடையே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லிக்குள் நுழைய வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக ஹரியாணா எல்லையில் குவிந்த அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைக்க முற்பட்டனா். ஆனால், போலீஸாரின் தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தில்லியை நோக்கி முன்னேறினா்.

இதனிடையே அம்பாலா மாவட்டத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் லாரி மீது ஏறி தண்ணீா் வரும் குழாயை மூடிய நவ்தீப் சிங் (26) என்பவரை போலீஸாா் கைது செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் போலீஸ்காரா் ஒருவா் மீது வேகமாக டிராக்டரை ஒட்டி கொல்ல முயன்ாக அவரது தந்தை ஜெய்சிங் ஜல்பேரா மீதும் போலீஸாா் எப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளனா்.

ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கும் வரை தில்லிக்குள் நுழைவதில்லை என்றும் எல்லைப் பகுதியான டிக்ரி மற்றும் சிங்குவில் தங்கியிருக்க பெரும்பாலான விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

சமூக ஆா்வலரும் ஸ்வராஜ் இந்தியாவின் அமைப்பாளருமான யோகேந்திர யாதவ், விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். தில்லியிலிருந்து பானிபட் வரை காரில் சென்று பாா்த்தால் விவசாயிகள் போராட்டத்தின் உண்மைநிலை தெரியவரும். வரலாறு காணாத வகையில் விவசாயிகள் போராட்டத்திற்காக குவிந்துள்ளனா் என்றும் அவா் கூறினாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். குறைந்த பட்சம் ஆதார விலை நடைமுறையை கைவிட்டால் அது பெருநிறுவன முதலாளிகளுக்குத்தான் ஆதாயமாக இருக்கும். எங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடைக்காது என்கின்றனா் விவசாயிகள். இதனிடையே டிசம்பா் மாதம் 3 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு பல்வேறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே விவசாயிகள் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக ஹரியாணா முதல்வா் மனோஹா் கட்டாா் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் பேரணியில் சில தீய சக்திகள் காலிஸ்தான் கோஷத்தை எழுப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவா் கூறினாா். மேலும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த மாநில அரசே வழிகடட்டுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, விவசாயிகள் அநீதியை தட்டிக்கேட்பது குற்றமாகாது. கறுப்புச் சட்டங்கள் ரத்தாகும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT