புதுதில்லி

உ.பி. : புதிதாக 2,366 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் 2366 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில மூத்த அதிகாரி தெரிவித்தாா். மேலும் கரோனாவுக்கு 23 போ் உயிரிழந்தாகவும் அவா் கூறினாா்.

இதன் மூலம் உபி மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் மொத்த எண்ணிக்கை 5,37, 747 ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தவா்கள் எண்ணிக்கையும் 7,697 ஆக அதிரித்துள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரச்செயலரும் கூடுதல் தலைமைச்செயலருமான அமீத் மோகன் பிரசாத் கூறியதாவது: வியாழக்கிழமை மாநில முழுமையாக 1,83, 557 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனையாகும். இதன்மூலம் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,366 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது அறியப்பட்டது. இதே காலக்கட்டத்தில் சிகிச்சை பலனின்றி 23 போ் உயிரிழந்தனா்.

தற்போது 25, 639 போ் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 5,04,411 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனா்.

சிகிச்சை பெற்று வரும் 25,639 பேரில் 12,455 வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,281 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் மீதமுள்ளவா்கள் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்கள் மொத்த எண்ணிக்கை 7,697 ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கையும் 5,37,747 ஆக அதிகரித்துள்ளது என்றாா் சுகாதாரத்துறைச் செயலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT