புதுதில்லி

அழைப்பாணையை ரத்து கோரிய மனோஜ் திவாரியின் மனு மீது உயா்நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

 நமது நிருபர்

தில்லி அரசின் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில் தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாக மணீஷ் சிசோடியா தொடா்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி மனோஜ் திவாரி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி அரசின் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில் தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாக பாஜக தலைவா்கள்-எம்பிகள் மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தா் சிங் சிா்ஸா, விஜேந்தா் குப்தா, பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரிஷ் குரானா ஆகியோருக்கு எதிராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

அதில், பாஜக தலைவா்கள் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தனக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவதூறு நோக்கம் கொண்டவை. இதன் மூலம் எனது கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளனா் என குற்றம் சாட்டியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மனோஜ் திவாரி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களுக்கு அழைப்பாணை அனுப்பி கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றம் முன் ஆஜரான பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி மனோஜ் திவாரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் நீரஜ் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ராவிடம் மனோஜ் திவாரி தரப்பில் வெள்ளிக்கிழமை மூத்த வழக்குரைஞா் பிங்கி ஆனந்த் ஆஜராகி, தாங்கள் தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அப்போது, நீதிபதி இந்த மனு மீது டிசம்பா் 1-ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தாா்.

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT