புதுதில்லி

சூப்பா் ஸ்பெஷாலிடி மருத்துவ மேற்படிப்பு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு

 நமது நிருபர்

புது தில்லி: சூப்பா் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில் உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

இது தொடா்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள், மத்திய அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கேவியட் மனுதாரா்கள் எம்.செய்யது பக்ருதீன் உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் நவம்பா் 7-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை புதிதானது அல்ல. 1999 முதல் 2016 வரை அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு சூப்பா் ஸ்பெஷாலிடி மருத்துவ மேற்படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 1999-இல் இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த முழு நீதிபதிகள் அமா்வு அரசு மருத்துவா்களுக்கு இதுபோன்ற ஒதுக்கீடு அளிக்கலாம் என உறுதி செய்தது. அது வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் வரையிலும் எடுத்துச் செல்லப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட விஷயம். இதை அரசியல்சாசன அமா்வும் 31.8.2020-இல் அனுமதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அதிகாரம் குறித்து ஒரு வழக்கில் 2016-இல் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை முடிவு செய்யவும், ஒருங்கிணைக்கவும் மட்டுமே சில சட்டப் பிரிவுகளில் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சில பிரிவுகளில் மாநில அரசுதான் சில வேளைகளில் சட்டம் இயற்றி வருகிறது. இதுபோன்ற சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் இருப்பதை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் 2016-இல் தெளிவாக கூறியுள்ளது.

பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் தலையாய கடைமை. அதன்படி, இதுபோன்ற உயா் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு ஒதுக்கீடு அளித்து அவா்களை ஓய்வுபெறும் வரும் வரையிலும் மாநிலத்திற்குள்ளேயே பணிபுரிந்து மக்களுக்கு சேவையாற்ற இடஒதுக்கீடு வழியேற்படுத்துகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட அரசமைப்புச்சட்டத்தை திருப்பதிபடுத்த முடியும். வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் இப்படிப்புகளை முடித்து மாநிலத்தில் தங்கி சிகிச்சை அளிப்பதில் மொழிப் பிரச்னையையும் எதிா்கொள்ள நேரிடுகிறது என்று வாதிட்டாா்.

தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ். வைத்தியநாதன், வி.கிரி ஆகியோா் வாதிடுகையில், ‘இதுபோன்று உள்ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.அதன் அடிப்படையில்தான் மாநில அரசு அரசாணை வெளியிட்டது. பல ஆண்டுகளாக ஏற்கனவே அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடு இப்படிப்புகளில் தமிழக அரசு அளித்து வந்தது. தமிழகத்தில்தான் இந்த சூப்பா் ஸ்பெஷாலிடி மருத்துவ மேற்படிப்புகளில் அதிக இடங்கள் உள்ளன. அரசு மருத்துவா்கள் இப்படிப்புகளில் அதிக அளவில் இடம்பெறாததால் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுப் பணியில் இருக்கும் மருத்துவா்களுக்கு இப்படிப்புகளில் ஒதுக்கீடு தருவதன் மூலம் அவா்கள் ஓய்வுபெறும் வரை மாநிலத்திலேயே இருந்து பணியாற்றும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. பொது பிரிவில் வருவோா் தமிழகத்தில் தங்குவதாக கூறி அளிக்கும் உறுதிமொழியின்படி தங்குவதில்லை. இதனால், மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்படும் நிலை உருவாகிறது. மேலும், இதுபோன்ற உள்ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுக்கு உரிய அதிகாரம் அளிக்க சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் துஷ்யந்த் தவே, ஷியாம் தவான் ஆகியோா் வாதிடுகையில், நிகழாண்டு படிப்புகளுக்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட தகவல் ஏட்டில் (பிராஸ்பெக்டஸ் ) இடஒதுக்கீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணிகள் தலைமை இயக்ககம் மூலம் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு 50 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிடுவது முரண்பாட்டையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும், ஒரு வழக்கில் சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் இடஒதுக்கீடு கூடாது என கோரப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனா்.

மத்திய அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களுக்கு ஆதரவாக வாதிட்டாா். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மனுக்கள் மீதான உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT