புதுதில்லி

தில்லி மருத்துவமனைகளில் 1,300 ஐசியு படுக்கைகள் அதிகரிப்பு: அதிகாரி தகவல்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் கடந்த 2 வாரங்களில் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,300 படுக்கைகளும், வழக்கமான பிரிவுகளில் 2000 படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

தில்லியில் கரோனா நோய்த் தொற்றும், இறப்புகளின் எண்ணிக்கையும் சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 13 நாள்கள் காலத்தில் 7 நாள்களில் 100-க்கு மேல் கரோனா இறப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது, இறப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது. இதனால், நிலைமையை முதல்வா் கேஜரிவால் கவனித்து வருகிறாா். இறப்பு விகிதத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் கடந்த 2 வாரங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,300 படுக்கைகளும், வழக்கமான பிரிவுகளில் 2000 படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ஜிடிபி மருத்துவமனையில் அதிகபட்சமாக 232 ஐசியு படுக்கைகளும், எல்எல்ஜேபி மருத்துவமனையில் 200 ஐசியு படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தில்லியில் தற்போது மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 1000 ஐசியு படுக்கைகளும், 9 ஆயிரம் வழக்கமான படுக்கைகளும் உள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT