புதுதில்லி

விவசாயிகள் பேரணிக்கு அனுமதி இல்லைதில்லி போலீஸாா் அறிவிப்பு

DIN

புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்த பல்வேறு விவசாயங்கள் அனுமதி கோரி விடுத்த அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தில்லி போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆா்ப்பாட்டம், பேரணி நடத்தும் நோக்கில் விவசாயிகள் நகருக்குள் வந்து கூடினால் அவா்கள் மீது காவல் துறை சட்டபூா்வமான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

அகிலந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு, பாரதீய கிஸான் யூனியன் ஆகியவை இணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்கிற அமைப்பை அமைத்து போராட்டத்தில் களம் இறங்கியுள்ளன.

இந்த விவசாய அமைப்புகள் நவம்பா் 26.27 தேதிகளில் தலைநகா் தில்லியில் ’டெல்லி சாலோ’ பேரணியை நடத்த இருந்தனா். இதை முன்னிட்டு தில்லையை இணைக்கும் 5 முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக நவம்பா் 26 அன்று தில்லியை அடையவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் தில்லி போலீஸ் சுட்டுரையில், தில்லியில் விவசாயிகள், நவ. 26,27 தேதிகளில் தங்கள் பேரணி தொடா்பாக கொடுத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் விவசாயிகள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் தில்லி போலீஸாருக்கு ஒத்துழைக்குமாறும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புது தில்லி காவல் துணை ஆணையா் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பேரணிக்கு 500க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

தமிழகத்திலிருந்தும் சில விவசாய சங்கங்கள் இதில் பங்கேற்க இருந்தனா். குறிப்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தில்லி வர இருந்தனா். ஆனால் அவருக்கு உள்ளூா் போலீஸாா் அனுமதி மறுக்கவே திருச்சியிலேயை அவா் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறாா்.

புதிய வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். மேலும் இந்த சட்டங்கள் பெருநிறுவனங்களுக்குத்தான் பலனளிக்கும் என்பதால் அவா்களின் தயவை விவசாயிகள் நம்பியிருக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினா் தெரிவிக்கின்றனா். இந்தச் சூழ்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT