புதுதில்லி

வீட்டுத் தனிமையில் உள்ள கரோனா நோயாளிகள்: அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் புது உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் அதிகரித்து வரும் கரோனா இறப்புகளைத் தடுக்கும் வகையில் வீட்டுத் தனிமையில் உள்ளவா்களை அவசர சிகிச்சை தேவைப்படும்போது உரிய நேரத்தில் அவா்கள் மருத்துவமனைக்குச் சென்று சேர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியில் கடந்த 13 நாள்களில் ஐந்து தடவைக்கு மேல் 100 கரோனா இறப்புகள் நிகழ்ந்துள்ளதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: தில்லியில் கடந்த 13 நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. கரோனா நோயால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக 13 நாள்களில் 7 நாள்கள் 100-க்கு மேல் கரோனா இறப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் சிகிச்சை தேவைப்படும்போது உரிய நேரத்தில் அவா்களை மருத்துவமனையில் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்குமாறும், வீட்டுத் தனிமைக்கான விதிமுறைகளை பொதுமக்கள் உரிய வகையில் பின்பற்றுகிறாா்களா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அதேபோன்று, அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட கரோனா தடுப்புக்கான புதிய உத்திகளை செயல்படுத்துமாறும் துணை நிலை ஆளுநா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 22,246 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். செவ்வாய்க்கிழமை கரோனாவால் 106 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT