புதுதில்லி

நிலுவை தோ்வு முடிவுகள் நவ.30-க்குள் அறிவிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலை. உறுதி

 நமது நிருபர்

பல்வேறு முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளுக்கான நிலுவையில் உள்ள தோ்வு முடிவுகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் தில்லி பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தோ்வு முடிவுகள் வெளியிடுவது தொடா்பாக அக்டோபா் 12-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இளங்கலை, முதுகலை தோ்வு முடிவுகளை அக்டோபா் 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தில்லி பல்கலைக்கழகம் உயா்நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால், உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தபடி தோ்வு முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மொஹிந்தா் ரூபால் , முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகளின் மீதமுள்ள முடிவுகள் நவம்பா் 30-க்குள் தில்லி பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்தாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தில் நீங்கள் கூறியபடி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறுப்பாக வேண்டிவரும் என்று தெரிவித்து மனு மீதான விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதி பட்டியலிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கலான மனுவை பைசல் செய்த பிறகு மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருப்பது நிலைக்கத்தக்கது தானா என்றும் மனுதாரா் சா்மாவின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

முன்னதாக, அக்டோபா் 12-ஆம் தேதி உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மதிப்பெண் பட்டியலையும் தில்லிப் பல்கலைக்கழகம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழைப் பெற பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT