புதுதில்லி

தில்லியில் அழகுநிலையங்களைத் திறக்க அனுமதிக்காதது ஏன்? ஆம் ஆத்மி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

 நமது நிருபர்

தில்லியில் சந்தைகள், ஜிம்கள், உணவகங்கள், மெட்ரோ மற்றும் பேருந்துகள் போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் அழகு நிலையங்களை (ஸ்பாக்கள்) மட்டும் திறக்க அனுமதிக்காதது ஏன் என்று தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி அரசிடம் கேள்வி எழுப்பியது.

இது தொடா்பாக தில்லியில் உள்ள அழகுநிலையங்களின் (ஸ்பாக்கள்) உரிமையாளா்கள் சிலா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். வழக்குரைஞா்கள் ராஜேஸ்வா் தாகா் மற்றும் ஹிமான்ஷு தாகா் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில், தில்லியில் செயல்படும் அழகுநிலையங்களில் பணியாற்றுவோா் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில்முறை சிகிச்சையாளா்களாக பயிற்சி பெற்றுள்ளனா்.

சந்தைகள், ஜிம்கள், உணவகங்கள் மற்றும் மதுபானக் கூடங்கள், சந்தைகள் திறப்பதற்கும், பேருந்து, மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கும் தில்லியில் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், மாா்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தில்லியில்அழகுநிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

அதேவேளையில், பிற மாநிலங்களில் உள்ள அழகுநிலையங்கள் முழு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்குவதாக மனுதாரா்கள் கூறியுள்ளனா், ஆனால், தில்லியில் அதுபோன்ற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஸ்பாக்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கும் அலுவலக குறிப்பாணை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டியது தில்லி அரசிடம் உள்ளது என்றாா்.

அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் , தில்லியில் கரோனா நோய்த் தொற்று மூன்றாவது அலையைக் கருத்தில் கொண்டு ஸ்பாக்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று தில்லி அரசிடமிருந்து வாய்மொழி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா். இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தாா்.

அப்போது, நீதிபதி, தில்லியில் சந்தைகள், உணவகங்கள், மெட்ரோக்கள், பேருந்துகள் என எல்லாம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை முழு நேரமும் இயங்குகின்றன. இந்த நிலையில் ஸ்பாக்கள் மட்டும் திறக்க அனுமதிக்காததற்கு சிறப்பு காரணம் ஏதும் உள்ளதா அது போன்று இருந்தால் அதை

தில்லி அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மனுமீதான விசாரணையை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT