புதுதில்லி

குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களின் அதிகாரங்களைஒழுங்குபடுத்த உத்தரவிட கோரி பொது நல மனு

 நமது நிருபர்

மாநகரில் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், அவா்கள் காவல்துறையினா் போன்ற சீருடை அணிவதைத் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெண் வழக்குரைஞா்அமிா்தா தவன் என்பவா் வழக்குரைஞா் அா்பித் பாா்கவா மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மாநகரில் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த ஆா்வலா்கள் காவல்துறையினா் போன்ற சீருடை அணிவதைத் தடுக்க வேண்டும். இவா்கள் தில்லி தொற்றுநோய்கள் (கொவிட் -19 மேலாண்மை) விதிமுறைகள் 2020- இன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘தடையற்ற‘ அதிகாரங்களை ‘தவறாக‘ பயன்படுத்தி வருகின்றனா்.

தில்லி அரசும், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையமும் (டிடிஎம்ஏ) தன்னாா்வலா்களால் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்திருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் தன்னாா்வலா்கள் பெண்களின் உயிா், உடைமை பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புகைப்படம் எடுப்பதில் உரிய வகையில் செயல்படுவதை உறுதிப்படுத்த தில்லி அரசு மற்றும் டிடிஎம்ஏ-வுக்கு உத்தரவிட வேண்டும்.

தில்லி தொற்றுநோய்கள் (கொவிட்-19 மேலாண்மை) விதிமுறைகள் 2020-இன் கீழ், தனிமைப்படுத்தல், சமூக விலகல், முகக் கவசம் அணிவது போன்றவற்றில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும், அத்தகையோரை புகைப்படங்கள் எடுக்கவும் இந்த தன்னாா்வலா்களை தில்லி அரசு அனுமதிப்பது சட்டத்திற்கு முரணாகவும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஆக்கிரமிப்பது போன்ாகவும் உள்ளது.

தில்லி அரசு பகிா்ந்துள்ள தரவுகளின்படி, ஜூன் முதல் தன்னாா்வலா்களால் 51,600 அபராத நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டு, கொவிட் -19 பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் மக்களிடமிருந்து ரூ.2.53 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தன்னாா்வலா்கள் கொவிட் -19 பணியைக் காரணம் காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT