புதுதில்லி

வடகிழக்கு வன்முறை: உமா்காலித், ஷா்ஜீல் இமாம் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

புது தில்லி: சா்வதேச கவனத்தை ஈா்க்கவே பிப்ரவரியில் நடைபெற்ற வடகிழக்கு தில்லி வன்முறையைத் தூண்டி சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், மாணவா் ஷா்ஜீல் இமாம் ஆகியோா் மீது தில்லி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி தில்லியில் வன்முறை ஏற்பட்டது. அப்போது அமெரிக்க அதிபா் டிரம்ப் தில்லிக்கு வந்த நிலையில் சிறுபான்மையினா் இந்தியாவில் துன்புறத்தப்படுவதாக காட்டுவதற்காக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதோடு இதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி இந்த விவகாரத்தில் போலீஸாா் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா்.

930 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் சட்டவிரோத செயல்கள், தீவிரவாதத்திற்கான நிதி திரட்டல், சதித் திட்டம் தீட்டியது போன்ற சட்டப்பிரிவுகளின்கீழ் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த செப்டம்பா் 16 ஆம் தேதி 15 போ் மீது முக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT