புதுதில்லி

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த 70 லட்சம் லிட்டா் தண்ணீா் தெளிப்பு

 நமது நிருபர்

தில்லியில் காற்று மாசு அதிகமாக உள்ள 13 இடங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 36 நாள்களில் 70 லட்சம் லிட்டா் தண்ணீா் தெளிக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறை உயா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தில்லியில் காற்று மாசு அதிகமாக உள்ள ஜகாங்கீா்புரி, நரேலா, அசோக் விஹாா், விவேக் விஹாா், துவாரகா, முண்ட்கா, ரோகிணி, வாஜிப்பூா், ஓக்லா, பாவனா, ஆனந்த் விஹாா், பஞ்சாபி பாக், ஆா் கே புரம் உள்ளிட்ட 13 இடங்களை தில்லி அரசு கண்டறிந்திருந்தது.

இவ்விடங்களில் அடிக்கடி நீா் தெளிக்குமாறு தீயணைப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபா் மாதம் 17 ஆம் தேதி இந்த இடங்களில் நீா் தெளிப்பது தொடங்கப்பட்டது. இந்த 13 இடங்களில் கடந்த 36 நாள்களில் சுமாா் 70 லட்சம் நீா் தெளிக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் ஒவ்வொரு நாளும் சுமாா் 2 லட்சம் லிட்டா் நீா் தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில், 15 தீயணைப்பு வாகனங்களும், 45 தீயணைப்பு படை வீரா்களும் ஈடுபடுத்தப்பட்டனா். தினம்தோறும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் இரு மணிநேரமும் தண்ணீா் தெளிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT