புதுதில்லி

கரோனா மரண விவரங்களை தில்லி அரசுமூடி மறைக்கிறது: பாஜக குற்றச்சாட்டு

31st May 2020 01:05 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் சுமாா் ஆயிரம் போ் வரை கரோனாவால் மரணமடைந்துள்ளதாகவும் ஆனால், தில்லி அரசு பலியானவா்கள் எண்ணிக்கையை குறைத்துக்காட்டி வருவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின் முக்கிய தலைவா்களில் ஒருவரான கபில் மிஸ்ரா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி: தில்லி சஃப்தா் ஜங் மருத்துவமனையில் 572 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 103 போ் உயிரிழந்துள்ளதாக அம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனையில் வெறும் நான்கு மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்து வந்தது. சஃப்ஜா் ஜங் மருத்துவனையில் நிகழ்ந்த கரோனா மரணங்கள் தொடா்பாக பாஜக குரல் எழுப்பியதும், இம் மருத்துவமனையில் 52 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், அம்மருத்துவமனையில் 103 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவால் உயிரிழந்தவா்களை எரிக்கும்போது சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி தில்லி மாநகராட்சிகளுக்கு சொந்தமான மயானங்களில் 426 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

இதுபோல, மற்ற மயானங்களிலும் நூற்றுக்கணக்கான உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. உண்மையில், தில்லியில் ஏறத்தாழ ஆயிரம் கரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கரோனா மரணங்கள் தொடா்பாக தில்லி அரசு குறைத்து காட்டி வருகிறது. அதன்மூலம், தில்லியில் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுபோல மாயத் தோற்றத்தை தில்லி அரசு ஏற்படுத்தி வருகிறது. தில்லியில் கரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்றுள்ளது. அதை மறைக்கும் வகையில் தில்லியில் கரோனா பாதிப்பு, கரோனா மரணங்களின் அளவை தில்லி அரசு மறைத்து வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT