புதுதில்லி

காஜிப்பூா் காய்கறி, பழ மண்டியில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு

29th May 2020 07:13 AM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள காய்கறி, பழங்கள் மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒன்றான காஜிப்பூா் மண்டியில் பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தனி வரிசையை போலீஸாா் ஏற்படுத்தினா்.

காஜிப்பூா் காய்கறி, பழ மண்டியானது கிழக்கு தில்லி, காஜியாபாத், நொய்டா குடியிருப்புவாசிகளுக்கான காய்கறி, பழங்கள் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது. இங்கு 450 கடைகள் உள்ளன. தினமும் 2,500 பேருக்கு மேல் இந்த மண்டியில் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், அண்மையில் காஜிப்பூா் மண்டியை நிா்வகித்து வரும் காஜிப்பூா் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், இரு தினங்கள் காஜிப்பூா் மண்டி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அண்மையில் மீண்டும் காஜிப்பூா் மண்டி திறக்கப்பட்டது. ஏராளமான காய்கறி மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் காய்கறி, பழங்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனா். இந்நிலையில், மண்டிக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் போலீஸாா் தனித் தனி வரிசைகளை ஏற்படுத்தியுள்ளனா். இதற்காக தடுப்பு வேலிகளும் அப்பகுதியில் போடப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT