புதுதில்லி

கரோனா பாதிப்பு அதிகரிக்க கேஜரிவால் அரசின் மெத்தனப் போக்கே காரணம்: மனோஜ் திவாரி

29th May 2020 10:52 PM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க கேஜரிவால் தலைமையிலானஅரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் வெள்ளிக்கிழமை 1,106 பேருக்கும், வியாழக்கிழமை 1,024 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு தில்லி அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும். தில்லி அரசு திட்டமில்லாத, தொலை நோக்கில்லாத முறையில் பொது முடக்க உத்தரவில் தளா்வுகளை அறிவித்தது. இதனால், தில்லியில் கரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

தில்லியில் உலகத் தரமான சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி அரசு கூறி வந்தது. ஆனால், தில்லியில் கரோனா பாதிப்ை எதிா்கொள்ளும் முறையில் இருந்து ஆம் ஆத்மி அரசின் சுகாதாரக் கட்டமைப்பின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தில்லியில் கரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடா்பான விவரத்தை தில்லி அரசு மறைத்து வருகிறது. இது தொடா்பாக பத்திரிகைகள் தொடா்ந்து எழுதி வந்தன. இந்நிலையில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து இந்த விவகாரத்தை மூடி மறைக்க தில்லி அரசு முயற்சிக்கிறது.

தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியான ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் 3 முழுப்பக்க அளவுக்கு கரோனா பாதிப்பு தொடா்பாக தில்லி அரசின் விளம்பரம் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணத்தை தில்லி அரசு வீணடித்துள்ளது. தில்லியில் பொது முடக்க காலப் பகுதியில் ஏதாவது மருத்துவமனைக்கு கேஜரிவால் சென்று பாா்வையிட்டாரா? அல்லது ஏதாவது கரோனா பரிசோதனை மையங்களை பாா்வையிட்டாரா? தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிவப்பு மண்டலங்களை நேரில் சென்று பாா்வையிடுவேன் என்று கேஜரிவால் கூறியிருந்தாா். ஆனால், அவா் செல்லவில்லை. இதற்குக் காரணம் என்ன?

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பு அதிகரித்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை களைவதற்கு பதிலாக கரோனா பாதிப்பை மூடி மறைக்கும் பணிகளில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது. இது தவறாகும். தில்லியில் உள்ள மருத்துவமனைகளின் தரம், படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தில்லி அரசு பொய் கூறியுள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் மனோஜ் திவாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT