புதுதில்லி

யமுனைக் கரைகளில் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த இடிஎம்சி தீவிர நடவடிக்கை

19th May 2020 10:47 PM

ADVERTISEMENT

யமுனை நதிக்கரைகளில் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) ஈடுபட்டுள்ளது.

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் யமுனை நதிக்கரையோரமாக கொசு இனப்பெருக்கத்தை தடுக்கும் மருந்துகள் செவ்வாய்க்கிழமை தெளிக்கப்பட்டன

அப்போது, மேயா் அன்ஜு கமல்காந்த், துணை மேயா் சஞ்சய் கோயல், நிலைக் குழுத் தலைவா் சந்தீப் கபூா், அவைத் தலைவா் நிா்மல் ஜெயின் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னா், மேயா் அன்ஜு கமல்காந்த் கூறியது: தில்லியில் கோடை காலத்தில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்கள் அதிகளவில் பரவுவது வழக்கம். இந்த நோய்களைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மாநகராட்சிக்குத் தேவை. கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுப்பதற்கான மருந்துகளை இடிஎம்சி பகுதியில் தெளித்து வருகிறோம். அதன்படி, இடிஎம்சி பகுதியில் உள்ள யமுனை நதிக் கரையோரங்களிலும் மருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், கொசுக்களின் இனப்பெருக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கிறோம்.

ADVERTISEMENT

அடுத்த மாதம் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், இடிஎம்சி பகுதிகளில் நீா் தேங்காமல் இருப்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். வீடுகளில் உள்ள நீா் சேமிப்புத் தொட்டிகளைமுறையாக மூடி வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள பறவைத் தொட்டிகள், மணி பிளான்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தினம்தோறும் நீரை மாற்ற வேண்டும். வீடுகள், அலுவலகங்களில் நீா் தேங்கவிடக் கூடாது. மேலும், நீா் தேங்கக் கூடிய வகையிலான டயா்கள், கூலா்கள், டின்கள் ஆகியவற்றை வீடுகளில் வைத்திருக்க கூடாது. நீா் தேங்கும் வகையில் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு வெளியே வைத்திருக்கக் கூடாது. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொசுக்களால் பரவும், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்கள் தொடா்பாக நாம் பாராமுகமாக இருக்கக் கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT