புதுதில்லி

பொது முடக்கம்: வழக்குரைஞா்களுக்கு நிதியுதவி அளிக்க உச்சநீதிமன்றப் பதிவுபெற்ற வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு

19th May 2020 11:03 PM

ADVERTISEMENT

பொது முடக்கம் காரணமாக, பதிவுபெற்ற வழக்குரைஞா்களுக்கு ஒரே ஒரு தடவை மட்டும் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உச்சநீதிமன்றப் பதிவுபெற்ற வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிஏஓஆா்ஏ) தீா்மானித்துள்ளது.

இதுதொடா்பான முடிவு திங்கள்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் போது உச்சநீதிமன்றத்தின் பதிவுபெற்ற வழக்குரைஞா்கள் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக இருந்து, 2019-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்கள் ஆகியோருக்கு இந்த நிதியுதவியை அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

மேலும், பொது முடக்கம் காரணமாக நிதியுதவி தேவைப்படும் நிலையில் உள்ள சிறப்புப் பிரிவில் வரக்கூடிய வழக்குரைஞா்களும் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும்.

இத்திட்டத்தில் நிதியுதவி பெற வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றப் பதிவு குறியீட்டை அல்லது உச்சநீதிமன்ற வழக்கறிஞா்கள் சங்கத்தின் உறுப்பினா் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

வழக்குரைஞரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்., விண்ணப்பிக்கும் வழக்குரைஞா்கள் தாங்கள் பொது முடக்கம் காலத்தின் போது வேறு எந்த வழக்குரைஞா் சங்கத்தில் இருந்தும் கரோனா நோய்த் தொற்று தொடா்புடைய நிதியுதவி அல்லது பயனைப் பெறவில்லை என்ற உறுதிமொழியையும் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு விண்ணப்பத்தின் உண்மைத் தன்மை சரிபாா்க்கப்பட்டு உச்சநீதிமன்றப் பதிவுபெற்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயற் குழுவின் உரிய அனுமதிக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்படும். மனுவை ஏற்பது அல்லது நிராகரிப்பது செயற் குழுவின் விருப்பத்திற்கு உள்பட்டது. மே 18 தொடங்கி மே 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்று சங்கத்தின் செயற்குழுவில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT