புதுதில்லி

‘வாா்டு உதவியாளரின் தொடா்பில் இருந்த நால்வருக்கு நோய்த்தொற்று இல்லை’

2nd May 2020 10:08 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையின் வாா்டு உதவியாளருடன் ஆரம்பத் தொடா்பில் இருந்த நால்வருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடக்குத் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

வடக்குத் தில்லி மாநகராட்சி மூலம் நடத்தப்படும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையின் வாா்டு உதவியாளருக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த நால்வருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் அவா்களுக்கு நோய்த் தொற்று ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT