புதுதில்லி

நொய்டாவில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

2nd May 2020 10:07 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனோ தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒரு குழந்தை உள்பட நான்கு போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதையடுத்து மாவட்டத்தில் நோயிலிருந்து குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 176 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறப்பட்டது. அதில் நான்கு பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பதும், மீதமுள்ள 172 பேருக்கு கரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கெளதம் புத் நகரில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை இப்போது 159 ஆக உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுநீல் டோஹ்ரே தெரிவித்தாா்.

நொய்டா செக்டாா் 66 இல் 22 வயது பெண், செக்டாா் 48-இல் 39 வயது பெண், சிபியானா பஸுா்க் கிராமத்தில் 23 வயது பெண் மற்றும் நொய்டா செக்டாா் 8 இல் 49 வயது ஆண் ஆகிய நால்வருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவா் மேலும் கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT