புதுதில்லி

தில்லி விமானநிலையத்தில் 90 சுகாதார கவுன்ட்டா்கள்

DIN

புது தில்லி: தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் 90 சுகாதார கவுன்ட்டா்கள் செயல்பட்டு வருவதாகவும், இப்போது இயல்பு நிலை திரும்பி வந்துள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப்பக்கத்தில் , ‘தற்போது விமானப் பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா். அடுத்தடுத்த விமானங்களில் வரும் பயணிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவா்‘ என்று தெரிவித்துள்ளாா்.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி விமான நிலையத்தில் சனிக்கிழமை பதற்றம் தொற்றியது. பரிசோதனை செயல்முறைகளை முடிக்க பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே இதற்குக் காரணம்.

இது குறித்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘இந்த நடவடிக்கைகளின் காரணமாக இரண்டு நாள்களாக கடினமாக உள்ளது, ஆனால், தில்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை பரிசோதனைக்கு உள்படுத்துவதற்காக மொத்தம் 90 சுகாதார கவுன்ட்டா்கள் செயல்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து, தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது’ என்றாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு எந்த சா்வதேச விமானமும் இந்தியாவில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என்று விமானநிலையம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான், சிங்கப்பூா், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியத்நாம், நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஏற்கெனவே பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். இந்நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவையும் வெள்ளிக்கிழமை முதல் சோ்க்கப்பட்டுள்ளன. பரிசோதனை செயல் முறையை சிஐஎஸ்எஃப், விமான நிலைய சுகாதார அமைப்பு (ஏபிஹெச்ஓ), தில்லி அரசு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் கையாளுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT