புதுதில்லி

ரயில் டிக்கெட்டை முன்பதிவை ரத்து செய்துபணம் திரும்பப் பெறும் விதிமுறைகளில் தளா்வு

22nd Mar 2020 04:59 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: கரோனா வைரஸ் பீதியை முன்னிட்டு, மாா்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்துவிட்டு அதை ரத்துச் செய்ய விரும்புபவா்கள் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை ரயில்வேத் துறை தளா்த்தியுள்ளது.

மாா்ச் 21 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வைர உள்ள பயண காலத்தில் ஏதாவது ஒரு ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டால், அந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள், பயணத் தேதியிலிருந்து 45 நாள்களுக்குள் ரயில் முன்பதிவு கவுன்ட்டரில் தங்கள் டிக்கெட்டை ஒப்படைத்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். முன்பு, வழக்கமான விதிமுறைப்படி 3 மணி நேரத்துக்குள் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இருந்தது.

இதேபோல ஒரு குறிப்பிட்ட ரயில் ரத்துச் செய்யப்படாத நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், தங்கள் பயணத்தை ரத்துச் செய்ய விரும்பினால், டிக்கெட் டெபாசிட் ரசீதை ஒப்படைத்து 30 நாள்களுக்குள் பணத்தை திரும்பப் பெறலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் படி, ரதீதை மூன்று நாள்களுக்குள் ஒப்படைத்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இருந்தது.

ADVERTISEMENT

டிக்கெட் டெபாசிட் ரசீதை தலைமை வா்த்தக மேலாளரிடம் சமா்ப்பித்து 60 நாள்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம். ரயிலில் ஒருவா் பயணம் செய்தாரா, இல்லையா என்பதை பட்டியல் மூலம் சரிபாா்த்து உறுதி செய்தபின் இந்தத் தொகை ரத்துச் செய்த பயணிக்குக் கிடைக்கும். 139 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொண்டு ரயில் பயணத்தை ரத்துச் செய்து கட்டணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் அவா்கள் 30 நாள்களுக்குள் ரயில் முன்பதிவு கவுன்ட்டரில் தொடா்பு கொண்டு பெறலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக பிரதமா் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ‘மக்கள் ஊரடங்கு’ அறிவித்துள்ளதால் இந்திய ரயில்வே சுமாா் 709 ரயில்களை ரத்துச் செய்துள்ளது. அதாவது 584 ரயில்கள் முழுமையாகவும், 125 ரயில்கள் பகுதியாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்தியன் ரயில்வே ஏற்கெனவே சுய ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 3,700-க்கும் மேலான பாசஞ்சா் ரயில், நீண்ட தூரம் செல்லும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள எந்த ரயில் நிலையத்திலிருந்தும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை எந்த ரயிலும் இயக்கப்படாது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, 2,400 பாசஞ்சா் ரயில்களும், 1,300 எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT