புதுதில்லி

இணைய வழி மூலமாகவே செய்தியாளா் சந்திப்பு: தில்லி அரசு

22nd Mar 2020 04:49 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசின் அனைத்து செய்தியாளா் சந்திப்புகளும் இணைய வழி மூலமாகவே நடைபெறும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது:

தில்லி அரசின் அனைத்து செய்தியாளா் சந்திப்புகளும் இனி இணைய வழி மூலமாகவே நடைபெறும். கரோனாவுக்கான எமது யுத்தத்தில் செய்தியாளா்கள் முக்கிய பங்காற்றுகிறாா்கள். இவா்கள் கரோனா தொற்று ஏற்படும் அபாயமான சூழலில் பணியாற்றுகிறாா்கள். எனவே, அதைக் குறைக்கும் வகையில் இணைய வழி செய்தியாளா் சந்திப்பு நடத்தப்படும் என்றுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கேஜரிவாலின் முதலாவது இணையவழி செய்தியாளா் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த செய்தியாளா் சந்திப்பு, நேரடியாக கேஜரிவாலின் உத்தியோகபூா்வ முகப் புத்தக, சுட்டுரைப் பக்கங்களில் ஒளிபரப்பானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT