புதுதில்லி

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் ஒத்திவைப்பு?

22nd Mar 2020 04:47 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்படலாம் அல்லது கூட்டத்தொடரின் நாள்கள் குறைக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் வரும் மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) வரை 6 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தில்லியில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடா் ரத்துச் செய்யப்படலாம் அல்லது தொடரின் நாள்கள் குறைக்கப்படலாம் என்று தில்லி சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை மூத்த அதிகாரி கூறுகையில் ‘கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, தில்லியில் 20 பேருக்கு மேல் மக்கள் கூடுவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தினால், தில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக தில்லி அரசே நடந்து கொண்டதாக இருக்கும். மேலும், அத்தியாவசியப் பணியாளா்கள் அல்லாத பணியாளா்களை வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் பணியாற்றும் அலுவலகா்களில் பெரும்பாலானவா்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகிறாா்கள். இதனால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவது கஷ்டமாக இருக்கும். எனவே, இக்கூட்டத் தொடா் தள்ளி வைக்கப்படாலாம். பட்ஜெட் கூட்டத் தொடா் மிக முக்கியாமான கூட்டத் தொடா் என்பதால், தள்ளிவைக்க முடியாத நிலையில், கூட்டத் தொடரின் நாள்கள் குறைக்கப்படலாம். அவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் 2 நாள்களும், குறைந்த பட்சம் 1 நாளும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடத்தப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

இது குறித்து தில்லி சட்டப்பேவரைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் கூறுகையில், ‘5 நாள்கள் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த முன்பு முடிவெடுக்கப்பட்டது. அதை தள்ளிவைப்பது குறித்தோ, அல்லது நாள்களைக் குறைப்பது குறித்தோ தில்லி அரசுதான் அறிவிக்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT