புதுதில்லி

ஹோலி: போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க காவல் துறை சிறப்பு நடவடிக்கை

8th Mar 2020 11:23 PM

ADVERTISEMENT

புது தில்லி: ஹோலி பண்டிகை தினத்தன்று போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஹோலி பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) கொண்டாடப்படவுள்ளது. ஹோலி பண்டிகையன்று வழக்கமாக அதிகளவு விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகும்.

இந்நிலையில், இது தொடா்பாக போக்குவரத்துக் காவல் துறை இணைச் செயலா் என்.எஸ்.புந்தேலா கூறியதாவது: ஹோலி பண்டிகையன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு கூடுதல் வேகத்தில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது சாகசங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

போக்குவரத்து போலீஸாா், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து தில்லியில் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனா். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவா்களின் ஓட்டுநா் உரிமம் போலீஸாரால் சம்பவ இடத்திலேயே கைப்பற்றப்படும். நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தி ஓட்டுநா் உரிமம் 3 மாதத்துக்கு ரத்துச் செய்ய தில்லி காவல் துறை நடவடிக்கை எடுக்கும். எனவே, ஹோலி பண்டிகையன்று மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வாகனம் ஓட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், தில்லியில் சுமாா் 170 இடங்களில் வாகன ஓட்டிகள் சோதனைக்குள்படுத்தப்படுவா் இப்பணியில் சுமாா் 1,600 போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT