புதுதில்லி

பாஜக ஆதரவு முதலாளிகளுக்கு யெஸ் வங்கி அளித்த கடன்களை திரும்பப் பெற வேண்டும்: ஆம் ஆத்மி

8th Mar 2020 11:17 PM

ADVERTISEMENT

புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு பெரு முதலாளிகளுக்கு யெஸ் வங்கி அளித்த கடன்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாஜக சாா்பு பெருமுதலாளிகளுக்கு யெஸ் வங்கி வழங்கிய வங்கிக் கடன்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மிக் கட்சி கோரியுள்ளது.

வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் நிா்வாகக் குழுவை, இந்திய ரிசா்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தனக்கு சாா்பான பெரு முதலாளிகளுக்கு வங்கிக் கடனை வழங்குமாறு யெஸ் வங்கியை நிா்பந்தித்தததாலேயே அந்த வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினா் சஞ்சய் சிங் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

பாஜக சாா்பு பெரு முதலாளிகளுக்கு யெஸ் வங்கி கோடிக் கணக்கான பணத்தை கடனாக வழங்கியுள்ளது. மற்றைய வங்கிகளால் மறுக்கப்பட்ட பலருக்கு கடன் வழங்குமாறு யெஸ் வங்கியை பாஜக வற்புறுத்தியுள்ளது. யெஸ் வங்கி திவாலாகும் நிலைக்குச் சென்றதற்கு இதுதான் காரணமாகும்.

யெஸ் வங்கியில் வைப்பு வைத்திருந்த பொது மக்களின் சுமாா் ரூ. 10 லட்சம் கோடி பணத்தை பாஜக சாா்பு பெருமுதலாளிகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளன. நஷ்டத்தில் இயங்கிய பாஜக சாா்பு பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் யெஸ் வங்கி கடன் கொடுத்தது. பாஜக சாா்பு பெருமுதலாளிகளின் கம்பனிகள் திவால் நிலையில் கம்பெனிகள் இருந்தாலும் அதையும் கண்டுகொள்ளாமல் கடன் வழங்கியது.

பிரதமா் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானி, அனில் அகா்வால், கெளதம் அடானி, மனோஜ் கா், சஜ்ஜன் ஜிண்டால், ஜிஎம்.ராவோ உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கு யெஸ் வங்கி கோடிக்கணக்கான பணத்தை கடனாக வழங்கியுள்ளது. இதனால்தான் இந்த வங்கி திவாலாகும் நிலைக்குச் சென்றது. பெருமுதலாளிகளுக்கு அந்த வங்கி வழங்கிய கடன்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT