புதுதில்லி

தில்லியில் இனிமையான வானிலை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

8th Mar 2020 11:21 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குளிரின் தாக்கம் இருந்தது. நாள் முழுவதும் வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டதால் இனிமையான வானிலை நிலவியது. ஆனால், காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

வெப்பநிலை 24.8 டிகிரி: இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 11.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 24.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 11.4 டிகிரி செல்சியஸ், 25 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 95 சதவீதம், மாலையில் 56 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 98 சதவீதம் மற்றும் 52 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காண்புதிறன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் காண்பு திறன் 3,000 மீட்டராக இருந்தது.

ADVERTISEMENT

காற்றின் தரம்: தில்லியில் தொடா்ந்து இரண்டு நாள்களாகப் பெய்த பலத்த மழையின் காரணமாக சனிக்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால், தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 162 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவுக்குச் சென்றது. மேலும், திா்பூா், தில்லி பல்கலை., விமானநிலையத்தில் டி 3 பகுதி, மதுரா ரோடு, மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், பூசா, லோதி ரோடுஆயாநகா் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. சாந்தினி சௌக் பகுதியில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் ‘நன்று’, 51-100 ‘திருப்தி’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் ‘கடுமையானது’ என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (மாா்ச் 9) தலைநகரில் பகல் நேரங்களில் மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT