புதுதில்லி

வன்முறை பாதித்த மக்களுக்கு உதவி: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

6th Mar 2020 11:08 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி:  தில்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதை துரிதப்படுத்தும் வகையில், இருநாள் ஆவணங்கள் சரிபாா்ப்பு முகாம் தில்லி அரசு சாா்பில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகையை விரைந்து வழங்கும் வகையில், அவா்களின் விவரங்களை முடிந்தவரை விரைவாக சரிபாா்க்க தில்லி முடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதற்காக சிறப்பு சரி பாா்க்கும் முகாம்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடெபெறவுள்ளன. இந்த சரிபாா்ப்பு முகாம் ஆறு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் நடைபெறவுள்ளன. இதுவரை, வன்முறை இழப்பீடு தொடா்பாக 1,700 படிவங்களைப் பெற்றுள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT