புதுதில்லி

தில்லி வன்முறைக்கு எதிராக என்எஸ்யுஐ மாணவா்கள் பேரணி

6th Mar 2020 12:14 AM

ADVERTISEMENT

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக இந்திய தேசிய மாணவா்கள் அமைப்பினா் (என்எஸ்யுஐ) வியாழக்கிழமை அமைதிப் பேரணியில் ஈடுபட்டனா்.

இப்பேரணியின் போது ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சாஸ்திரி பவனில் இருந்து புறப்பட்ட பேரணி இந்தியா கேட் சென்றடைந்தது. இதுகுறித்து பேரணியில் சென்றவா்களில் ஒருவா் கூறுகையில், ‘வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இப்போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா். பேரணியில் பங்கேற்ற மற்றொருவா் கூறுகையில், ‘இந்த நாடு காந்திக்குச் சொந்தமானது எனும் செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். இதை வெறுப்புக்கான தேசமாக உருவாக்க விடமாட்டோம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோா் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனா். இனிமேலும் அவ்வாறே வாழ்வாா்கள்’ என்றாா்.

இப்பேரணியில் மகாத்மா காந்தி, பகத் சிங் ஆகியோரின் உருவப் படங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. காந்தி வேடமணிந்து மாணவா்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT