புதுதில்லி

தில்லியில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

6th Mar 2020 12:15 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை காலை, மாலையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சிறிதளவு குறைந்திருந்தது. ஆனால், நகரில் புழுக்கம் நிலவியது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை காலையில் மூடுபனி இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல வெயில் இருந்தது. காலை வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. மாலையிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது. வானம் நாள் முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது. மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்திருந்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 4.2 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல பாலத்தில் 5.6 மி.மீ., லோதி ரோடில் 3.6 மி.மீ., ரிட்ஜி பகுதியில் 7.7 மி.மீ, ஆயாநகரில் 3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

வெப்பநிலை 27 டிகிரி: இந்நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 14.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் இருந்தது.

ADVERTISEMENT

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. ஆயாநகரில் முறையே 14 டிகிரி செல்சியஸ், 26.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 84 சதவீதம், மாலையில் 69 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 85 சதவீதம் மற்றும் 61 சதவீதம் எனவும் இருந்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பகுதியில் காண்புதிறன் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் காண்பு திறன் 3,500 மீட்டராக இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் மழையின் காரணமாக வியாழக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.தில்லியில் பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 80 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலை. விமானநிலையத்தில் டி 3 பகுதி, சாந்தினி சௌக், ஆயாநகா், பூசா, மதுரை ரோடு, லோதி ரோடு மற்றும் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையானது என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) தலைநகரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், அன்று காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு திருப்தி - நன்று பிரிவில் இருக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT