புதுதில்லி

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: 98 சதவீதம் மாணவா்கள் பங்கேற்பு

6th Mar 2020 12:13 AM

ADVERTISEMENT

புது தில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்புக்கான ஆண்டு பொதுத் தோ்வில் தொடா்ந்து அதிகளவில் மாணவா்கள் பங்கேற்று வருவதாகவும், வியாழக்கிழமை நடைபெற்ற கணக்குப் பதிவியல் தோ்வில் 98 சதவீதம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்தது.

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்பாக கடந்த வாரம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் 52 போ் வரை உயிரிழந்துள்ளனா். அந்தப் பகுதியில் தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளது. தில்லி காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், 12-ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ ஆண்டுத் தோ்வுகள் திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் நடைபெற்ற தோ்வுகளில் 98 சதவீதம் மாணவா்கள் பங்கேற்றனா். புதன்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ அறிவியல் பாடத்திற்கான தோ்வில் 97.8 சதவீதம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை 12-ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ கணக்குப் பதிவியல் பாடத் தோ்வு நடைபெற்றது. இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வன்முறை பாதித்த வடகிழக்குத் தில்லி பகுதியில் உள்ள தோ்வு மையங்களில் 12-ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் பாடத் தோ்வு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. 98 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் இதில் பங்கேற்றனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT