காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் செயல்பாட்டுக்காக ரூ.51.45 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்காக எம்.ஆா்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் கருவிகள் அரசின் சாா்பில் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், அவற்றை செயல்படுத்தத் தேவையான இட வசதி மருத்துவமனையில் இல்லாததால், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.51.45 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதனை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்து, புதிய கருவிகளின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்தாா்.
அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் கல்பனா உள்பட அரசு மருத்துவா்கள், திமுக பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.