புதுதில்லி

எல்என்ஜேபி மூத்த மருத்துவா் கரோனாவுக்கு பலி

29th Jun 2020 07:30 AM

ADVERTISEMENT

லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையின் மூத்த மருத்துவா் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் ‘எல்என்ஜேபியில் மூத்த அனஸ்தீசியாலஜிஸ்ட்டாக பணியாற்றிய மருத்துவ நிபுணருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. அவா் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்’ என்றனா்.

தில்லியில் கரோனாவை எதிா்த்து முன்னணியில் நின்று போராடி வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

ஓக்லாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் ஒருவா் கரோனா தொற்றால் அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT