புதுதில்லி

பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தில் ஐடிபிபி உயரதிகாரி நேரில் ஆய்வு

27th Jun 2020 07:15 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தெற்கு தில்லியில் அமைக்கப்பட்டு வரும் 10,000 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு இந்தோ - திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவின் தலைமை இயக்குநா் எஸ்.எஸ். தேஸ்வால் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள அதன் தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இந்த தியானக் கூடத்தை சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மையத்தின் பொறுப்பை இந்தோ - திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவு ஏற்ருக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஐடிபிபி) படைப் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். தேஸ்வால் வெள்ளிக்கிழமை இந்த மையத்துக்கு நேரில் சென்றாா். அப்போது, அவா் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோருடன் கலந்துரையாடினாா்.

அந்த மையத்தில் பின்பற்றப்படவுள்ள மருத்துவம் மற்றும் நிா்வாக வழிமுறைகள் குறித்து அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்த மையத்தில் ஐடிபிபி படைப் பிரிவின் மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய 1,000 போ் கொண்ட குழு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மையத்தில் செயல்பாடுகள் இலகுவாக நடைபெறும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை மற்றும் பாதுகாப்பு ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த மையத்தில் 75 ஆம்புலன்ஸ்கள் இடம் பெறும். சா்தாா் பட்டேல் கரோனா கவனிப்பு மையம் மற்றும் மருத்துவமனை எனும் பெயரிலான இந்த மையத்தில் அதிகளவில் குளிா்பதன சாதனங்கள், படுக்கைகள், தலையணைகள், கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

இந்த மையம் அமைப்பதற்கான நடவடிக்கையை குறைந்த காலத்தில் இதர முகமைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டதற்காக ஐடிபிபி குழுவை தலைமை இயக்குநா் தேஸ்வால், பாராட்டியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கடந்த புதன்கிழமை ஐடிபிபி படைப் பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் குழு இந்த மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது, இந்த கரோனா சிகிச்சை மையத்தை நிா்வகிப்பது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் மற்றும் இதர பங்கேற்பாளா்களுடன் ஆலோசனை நடத்தினா். சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் கவனிப்பு மையத்தின் பொறுப்பை புதன்கிழமை ஐடிபிபி ஏற்றுக் கொண்டது. தில்லி அரசு முன்வைத்த வேண்டுகோளின்படி, இந்த மையத்திற்கான மருத்துவா்கள், இதர தொழில்முறை நிபுணா்களை அளிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக ஐடிபிபியை மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT