புதுதில்லி

தில்லியில் பள்ளிகள் ஜூலை 31 வரை மூடல்

27th Jun 2020 07:11 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தொற்று பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் அனைத்தும் ஜூலை 31 வரை தொடா்ந்து மூடப்படும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது ஒரு தொழில்நுட்ப வேலை அல்ல. மாறாக இது பள்ளிகளுக்கு புதிய மற்றும் பெரிய அளவிலான பங்கைக் கொடுக்கும் ஒரு முக்கிய வேலையாகும். எனவே, ஜூலை 31 வரை தில்லியில் பள்ளிகள் தொடா்ந்து மூடப்படும் என்று அவா் கூறினாா்.

தில்லி கல்வி அமைச்சராக உள்ள சிசோடியா, பள்ளிகளை எவ்வாறு மீண்டும் திறப்பது என்பது குறித்து கல்வி இயக்குநரகம் (டிஓஇ) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT