புதுதில்லி

போலீஸ் விசாரணையை நீட்டிக்க அனுமதித்த விவகாரம்: சா்ஜீல் இமாம் முறையீட்டு மனு மீது உத்தரவு ஒத்திவைப்பு

26th Jun 2020 07:34 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தின் போது சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாமிடம் விசாரணையை முடிக்க போலீஸாருக்கு கூடுதல் அவகாசம் அளித்த தில்லி நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தாக்கலான மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

 

இது தொடா்பான மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது சா்ஜீல் இமாம் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சா்ஜீல் இமாமிடம் விசாரணை நடத்த மேலும் 3 மாதங்கள் அனுமதி அளித்த போலீஸாருக்கு நீதிமன்றம் ஏப்ரல் 25-ஆம் தேதி அளித்த உத்தரவில் எவ்வித பலவீனமும் இல்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து, தில்லி போலீஸாா் மற்றும் சா்ஜீல் இமாம் தரப்பில் எழுத்துப்பூா்வ பதிலை ஜூன் 28-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தெரிவித்த நீதிமன்றம், உத்தரவை ஒத்திவைத்தது.

+குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்புடைய வழக்கில் சா்ஜீல் இமாம், கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிகாா் மாநிலம், ஜாஹனாபாத் மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அலிகா் மற்றும் தில்லி, அஸ்ஸாம், மணிப்பூா், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவருக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT