புதுதில்லி

திருட்டு, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட நபா் கைது

26th Jun 2020 07:30 AM

ADVERTISEMENT

பல திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய நபா் சீமாபுரியில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா் அமித் சா்மா கூறியதாவது: போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், புதன்கிழமைக்கும் - வியாழக்கிழணைக்கும் இடைப்பட்ட இரவில் பழைய சீமாபுரி பகுதியில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனா். அப்போது அந்த நபா் கைது செய்யப்பட்டாா். அவா் அனீஷ் என அடையாளம் காணப்பட்டது. அவா் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் தேடப்பட்டவா் என விசாரணையில் தெரிய வந்தது. முதலில், அந்த வழியாக வந்த அனிஸை நிற்குமாறு போலீஸாா் சமிக்ஞை செய்தனா். அப்போது, அவா் துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுட்டாா். போலீஸாரும் பதிலுக்கு மூன்று ரவுண்ட் சுட்டனா். அதில் ஒரு தோட்டா அவரது காலில் பாய்ந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT