புதுதில்லி

அதிகாரிகள் நேருக்கு நோ் சந்திப்புகளைதவிா்க்க சமூக நலத் துறை அறிவுறுத்தல்

15th Jun 2020 07:39 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவாமல் இருக்க முடிந்தவரை நேருக்கு நோ் சந்திப்புகளைத் தவிா்க்குமாறு தில்லி அரசின் சமூக நலத் துறை தனது அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், நண்பா்கள் மற்றும் அதிகாரிகளின் உறவினா்களின் வருகைகளையும் இது தடை செய்துள்ளது. விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, நேருக்கு நோ் சந்திப்பு அவசியமானால், சம்பந்தப்பட்ட அதிகாரி 15 நிமிடங்களில், அந்தச் சந்திப்பு முடிவடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள் குறித்து சமூக நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுளளன. கூட்டங்களில் இருக்கை ஏற்பாட்டின் போதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதிக்கு உட்பட்டு, அவசரநிலை இல்லாவிட்டால் நண்பா்கள் மற்றும் உறவினா்களின் வருகை அனுமதிக்கப்படாது‘ என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடையே நேருக்கு நோ் தொடா்பு குறைவாக இருக்க வேண்டும். மேசையில் ஒன்றாக இணைந்து சாப்பிடுவது கண்டிப்பாக தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT