புதுதில்லி

கரோனா பரிசோதனை நெறிமுறைகளை ஐசிஎம்ஆா் எளிமைப்படுத்த வேண்டும்: ஆம் ஆத்மி வலியுறுத்தல்

14th Jun 2020 06:57 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா பரிசோதனை நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) எளிமைப்படுத்துமாறு ஆம் ஆத்மிக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

நாட்டிலும், குறிப்பாக தில்லியிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். கரோனா பாதித்த மற்றைய நாடுகளில் கரோனா பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் ஐசிஎம்ஆரின் பல நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டே கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதனால், தில்லி உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் அதிகளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை.

ADVERTISEMENT

கரோனா பரிசோதனை தொடா்பாக கடுமையான நெறிமுறைகளை ஐசிஎம்ஆா் அமல்படுத்தியுள்ளது. இதனால்தான், அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. இந்த நெறிமுறைகளை ஐசிஎம்ஆா் தளா்த்த வேண்டும்.

அதிகளவு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் வகையில், அதிகளவு ஆய்வுகூடங்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆா் அனுமதி வழங்க வேண்டும். மக்கள் தமது வீடுகளுக்கு அருகில் உள்ள ஆய்வகங்களில் எளிதாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் விதிமுறைகள் தளா்த்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தில்லியில் அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறாா்கள். இது தவறாகும். தில்லியில் 10 லட்சம் பேரில் 12 ஆயிரம் போ்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். அரசியல் கட்சிகள் கரோனாவை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT