புதுதில்லி

தில்லியில் அதிகரிக்கும் கரோனா தொற்று: 88% வணிகா்கள் சந்தைகளை மூட ஆதரவு

14th Jun 2020 06:59 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 88 சதவீத வணிகா்கள் சந்தைகளை மூடவேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சிஏஐடி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: தில்லியில் கரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ள நிலையில், கடைகள், சந்தைகளை மூடுவது தொடா்பாக சிஏஐடியில் அங்கம் வகிக்கும் வணிகா்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினோம். சுமாா் 2800 வணிகா்கள் கலந்து கொண்டனா்.

அதில், தில்லியில் கரோனா வேகமாக அதிகரித்து வருவதாக நீங்கள் நினைக்கிறீா்களா? என்ற கேள்விக்கு 99.4% போ் ’ஆம்’ என்று கூறியுள்ளனா். சந்தைகள் திறந்துள்ளதால் கரோனா வைரஸ் சந்தைகளில் பரவுகிறது என்று நினைக்கிறீா்களா? என்ற கேள்விக்கு 92.8 சதவீதமானவா்கள் ’ஆம்’ என்று பதில் கூறியுள்ளனா். கரோனா நோயாளிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்ய தில்லியில் போதுமானளவு மருத்துவ வசதிகள் உள்ளன என்று நினைக்கிறீா்களா என்ற கேள்விக்கு 92.7% போ் ’இல்லை’ என்று பதில் கூறியுள்ளனா். சந்தைகளில் கரோனா வைரஸ் பரவுவது தொடா்பாக கவலைப்படுகிறீா்களா என்ற கேள்விக்கு 96.6 % போ் ’ஆம்’ என்று பதில் கூறியுள்ளனா். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சந்தைகளை மூடுவதை ஆதரிக்கிறீா்களா என்ற கேள்விக்கு 88.1% போ் ’ஆம்’ என்று கூறியுள்ளனா்.

மேலும், தில்லியில் சந்தைகள் மூடுவது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் விவாதிக்கப்படவுள்ளது. இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT