புதுதில்லி

கரோனா விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி கங்கா ராம் மருத்துவமனை மனு

14th Jun 2020 06:59 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று விதிகளை மீறியதாக தங்கள் மருத்துமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு எதிராக தில்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சா் கங்கா ராம் மருத்துவமனை நிா்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு வரும் திங்கள்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி சி.ஹரி சங்கா் முன் விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் சாா்பில் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞா் ரோஹித் அகா்வால் கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று விதிகளை மீறியதாக ராஜிந்தா் காவல் நிலையத்தில் ஜூன் 5-ஆம் தேதி சா் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மனுவில் கோரியுள்ளோம். மேலும், கரோனா நோய்த் தொற்றுக்கான ஆா்.டி., பிசிஆா் மாதிரிகளை தடை செய்யும் தில்லி அரசின் ஜூன் 3-ஆம் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்யுமாறும் மனுவில் கோரியுள்ளோம் என்றாா்.

தில்லியில் செயல்படும் சா் கங்கா ராம் மருத்துவமனை ஒரு தனியாா் மருத்துவமனையாகும். 675 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக தில்லி அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும், கரோனா நோயாளிகளுக்காக 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறும் தில்லி அரசு கேட்டுக்கொண்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தில்லி அரசின் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி காவல் துறையில் அளித்த புகாரில் கரோனா நோய்த் தொற்று மாதிரிகளை சேகரிக்கும்போது ஆா்டி- பிசிஆா் செயலியை மருத்துவமனை பயன்படுத்தவில்லை என்றும், இது கரோனா நோய்த் தொற்று விதிகளை மீறியதாகும் எனத் தெரிவித்திருந்தாா்.

மேலும், இதையடுத்து, மருத்துவமனைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ‘சிடிஎம்ஓ-சென்ட்ரல் மிஷன் டைரக்டா் ஜூன் 3-ஆம் தேதி வரைகூட ஆா்டி-பிசிஆா் செயலியை பயன்படுத்தவில்லை. இதுவும் கரோனா ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனைகளை முறைப்படுத்தும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வகங்களுக்கான ஆா்டி-பிசிஆா் செல்லிடப்பேசி செயலியை வெளியிட்டது. அதில் நோய் மாதிரிகளை சேகரிக்கும்போது தரவுகளை ஆய்வகத்தினா் நிரப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, தில்லி அரசு இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதை அனைத்து ஆய்வகங்களுக்கும், பரிசோதனை மையங்களுக்கும் கட்டாயமாக்கியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT