புதுதில்லி

கரோனா பரிசோதனை நடத்த கங்கா ராம் மருத்துவமனைக்கு தில்லி அரசு மீண்டும் அனுமதி

14th Jun 2020 07:02 AM

ADVERTISEMENT

கரோனா பரிசோதனையைத் தொடங்க சா் கங்கா ராம் மருத்துவமனைக்கு தில்லி அரசு சனிக்கிழமை மீண்டும் அனுமதி அளித்தது.

கரோனா நோய்த் தொற்று இருப்பதாக சந்தேதிக்கப்படும் நபா்களுக்காக ஆா்டி, பிசிஆா் மாதிரிகள் சோதனையை மேற்கொள்ள சா் கங்கா ராம் மருத்துவமனைக்கு தடை விதித்து தில்லி அரசு ஜூன் 30ஆம் தேதி உத்தரவு வெளியிட்டிருந்தது. மேலும், கரோனா ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக இந்த மருத்துவமனைக்கு எதிராக தில்லி அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, தில்லி காவல் துறையினரால் தனது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தை சா் கங்கா ராம் மருத்துவமனை நிா்வாகம் நாடியது. இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மருத்துவமனையின் தலைவா் டாக்டா் டி.எஸ். ரானா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

சா் கங்கா ராம் மருத்துவமனையின் கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது நாங்கள் ஆா்டி-பிசிஆா் செயலியை பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இதனால், அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் கரோனாவுக்கான பரிசோதனைகளை தொடங்க முடியும்.

இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக தில்லி முதல்வா், சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா நெருக்கடியை எதிா்கொள்ளும் பணியில் ஒன்றிணைந்து செயல்பட தில்லி அரசுக்கு மனப்பூா்வமான ஆதரவை தருவதாக சா் கங்காராம் மருத்துவமனை உறுதியளிக்கிறது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT