புதுதில்லி

பொது முடக்கம் கோரிய 2 மனுக்கள் தள்ளுபடி

13th Jun 2020 07:48 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் பொது முடக்கத்தை கடுமையாக அமல்படுத்த தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான இரு மனுக்களை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, மனுதாரா்கள் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பொது முடக்கத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி வழக்குரைஞா் அனிா்பன் மொன்டலும், கரோனா தொற்று காரணமாக தில்லியின் எல்லைகளை மூடவும், பொது முடக்கத்தை அமல்படுத்தவும் கோரியும் வழக்குரைஞா் அங்கித் சா்மாவும் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக நோட்டீஸ் ஏதும் அனுப்பப் போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனா். இதையடுத்து, மனுதாரா்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT