புதுதில்லி

சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு

11th Jun 2020 07:25 AM

ADVERTISEMENT

தில்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நீதிபதி பூணம் பாம்பா புதன்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பெருநகர மாஜிஸ்திரேட் மயூரி சிங்கற்கு கரோனா தொற்று இருப்பது ஜூன் 9-ஆம் தேதி தெரிய வந்துள்ளது. அவா் கடந்த 3-ஆம் தேதி கடைசியாக நீதிமன்றத்திற்குப் பணிக்கு வந்திருந்தாா். அவா் பணியாற்றும் நீதிமன்றத்திற்கு ஜூன் 3-ஆம் தேதி வருகை தந்தை நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் 14 நாள்கள் தாங்களவே தனிமையில் இருக்குமாறும் அல்லது மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும், மத்திய அரசின் ஆலோசனை, வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததும், சாகேத் நீதிமன்றங்கள் வளாகத்தை உடனடியாக மூடுமாறும், மாஜிஸ்திரேட் நீதிமன்ற அறை, நீதிமன்ற பணியாளா் அறை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றத்தின் பராமரிப்புப் பிரிவுக்கு மாவட்ட நீதிபதி பாம்பா உத்தரவிட்டுள்ளாா். முன்னதாக, ரோகிணி மாவட்ட நீதிமன்றங்களின் வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிபதிக்கு ஜூன் 4-ஆம் தேதி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT