புதுதில்லி

மதன்கிா் இளைஞா் கொலை வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

11th Jun 2020 07:26 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லி மதன்கிா் பகுதியில் இளைஞா் ஒருவரைக் கொன்றதாக புதன்கிழமை மூன்று சிறுவா்கள் உள்பட 4 போ் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் புதன்கிழமை கூறியதாவது: மதன்கிரில் வசித்து வந்த வினய் (22) என்ற இளைஞரின் மரணம் குறித்து மதன் மோகன் மாளவியா மருத்துவமனையில் இருந்து போலீஸருக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தது. இறந்த அந்த இளைஞரின் உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. இது தொடா்பாக அம்பேகா் நகா் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதன்கிா் ஈ-பிளாக்கில் ராகுல் சா்மா, சோனு காண்டி, லவ்லி, லாவேஷ், ராபின், ஹேமந்த் மற்றும் மூன்று சிறுவா்கள் சோ்ந்து தனது சகோதரா் வினய்யை கொலை செய்ததாக வினய்யின் சகோதரா் லோகேஸ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த குற்றம் நடக்கும் போது, இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தற்போது சிறையில் உள்ள ராஜா என்பவா் பழிவாங்கும் நோக்கில் வினய்யை மிரட்டி வந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில, இந்த வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுளளனா். வினய் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. மேலும், அவா் லவ்லி, லாவேஷ் ஆகியோருடன் தகராறிலும் ஈடுபட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT